தூத்துக்குடி அய்யனடைப்பு கிராமத்தில் மரம் நடும் பசுமை விழா நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமை வகித்தார். திட்ட இயக்குநர் ஐஸ்வர்யா, வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், கோட்டாட்சியர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து அய்யனடைப்பு பகுதியை சுற்றி 56 மரங்கள் நடப்பட்டது. இந்த விழாவில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கிராம உதயம் கிளை அலுவலகம் ஆழ்வார்தோப்பு தொண்டு நிறுவன மேலாளர் வேல்முருகன், வனச்சரகர் பாபு, வன அலுவலர் ஜெயக்குமார், அய்யனடைப்பு கிராம உதவியாளர் சீனிவாசன், பசுமை தோழர் சந்தன சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வனத்துறை, கோத்தாரி இன்டஸ்ட்ரியல், எக்னோரா நிறுவனம் மற்றும் கிராம உதயம் தொண்டு நிறுவனங்கள் செய்திருந்தனர்.


