சம்பாதி என்னும் கழுகு முனிவர் இவ்வூரில் முருகனை வழிபட்டதால் கழுகுமலை எனப் பெயர் பெற்றது. இவ்வூர் மலை பாறையை உடைத்து மூர்த்தி அமைக்கப்பட்டதால் முருகனின் மற்றுமொரு குடவரைக்கோயிலாக இக்கோயில் உள்ளது. இக்கோயில் விமானம் மலைதான். இக்கோயிலில் பிரகாரம் சுற்றிவர மலையைச் சுற்றித்தான் கிரிவலம் வர வேண்டும். இந்தக் கிரிவலம் பௌர்ணமி தோறும் சுமார் 5 ஆயிரம் மக்கள் கூடி நடக்கிறது. கோயிலோடு இணைந்த மலை 300 அடி உயரம் உள்ளது. கோயிலின் கருவறை, அர்த்த மண்டபம் மலையைக் குடைந்து செதுக்கப்பட்டுள்ளது. கருவறையில் வள்ளி தெய்வானையோடு முருகன் காட்சியளிக்கிறார். முருகன் வாகனமான மயில் இடது பக்கம் தோற்றம் அளிப்பது சிறப்பு. இந்திரனே மயிலாக தோற்றமளிப்பதாகக் கூறப்படுகிறது. வள்ளி தெய்வானை ஒருவருக்கொருவர் முகம் பார்த்து முருகன் முன்பே இருப்பது சிறப்பு. எனவே அரக்கனை வதம் செய்தும் கூட துணைவியார்களின் முகம் பார்ப்பதால் சாந்த முருகனாய் பக்தர்களுக்கு அபயம் அளிக்கிறார் என்பது ஐதீகம்.தென்னிந்தியாவில் முருகனுக்கு ஒரு முகமும், ஆறுகரங்களும் உள்ள திருத்தலம் இதுதான். தாராகசூரனை வதம் செய்வதற்காகவே இக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இன்று கழுகுமலை கைலாசமூர்த்தி கோவிலில் தாராகசூர வதம் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்


