ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகரம் பகுதியை சேர்ந்த ஐசக் மகன் பொன்சீலன் (எ) சிங்கம் என்பவரை கடந்த 18.08.2021 அன்று முன்விரோதம் காரமாணமாக ஏரல் அகரம் பகுதியை சேர்ந்தவர்களான பொன்ராஜ் என்பவரது மகன்களான ஜெகன், ரூபன், ஜெயசீலன் என்பவரது மகன்களான ஜெபசிங் சாமுவேல், ஜெபஸ்டின், யோகராஜ் மகன் பெனித் நியூட்டன், வெள்ளபழம் மகன் மாரிமுத்து, சுவாமியடியான் மகன் ரூபன் தேவபிச்சை, குணசேகர் மகன் பாலகிருஷ்ணன் மற்றும் கொடிவேல் முருகன் மகன் நவநீதன் ஆகியோர் சேர்ந்து அகரம் பகுதியில் வைத்து அரிவாளால் தாக்கி கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும் திருடிச் சென்ற வழக்கில் ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் குற்றவாளிகள் ஜெகன், ரூபன், ஜெபசிங் சாமுவேல், ஜெபஸ்டின், பெனித் நியூட்டன், மாரிமுத்து, ரூபன் தேவபிச்சை, பாலகிருஷ்ணன், நவநீதன் ஆகியோரை கைது செய்து, திருடிச் சென்ற நகைகளையும் மீட்டனர். மேற்படி இவ்வழக்கின் முக்கிய எதிரிகளான ஜெபசிங் சாமுவேல், ஜெபஸ்டின், ஜெகன், மாரிமுத்து, ரூபன் தேவபிச்சை, பெனித் நியூட்டன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அகரம் பகுதியை சேர்ந்தவர்களான ஜெயசீலன் என்பவரது மகன்களான ஜெபசிங் சாமுவேல், ஜெபஸ்டின், பொன்ராஜ் மகன் ஜெகன், வெள்ளபழம் மகன் மாரிமுத்து, சுவாமியடியான் மகன் ரூபன் தேவபிச்சை மற்றும் யோகராஜ் மகன் பெனித் நியூட்டன் ஆகிய 6 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா மேற்படி எதிரிகள் 6 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.


