தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தைச் சேர்ந்த திருமலைநம்பி மகன் சுப்ரமணியன் (எ) சுப்பையா (55) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சாமி மகன் நம்பி (எ) வெள்ளையன் (47) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று கால்வாய் பகுதியில் உள்ள நம்பி சாஸ்தா கோவிலில் சுப்பிரமணியன் (எ) சுப்பையா மற்றும் அவரது தந்தை திருமலைநம்பி (70) மற்றும் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் தனுஷ்கோடி (72) ஆகியோர் இருந்தபோது அங்கு வந்த நம்பி (எ) வெள்ளையன் சுப்பிரமணியனிடம் தகராறு செய்து, சுப்பிரமணியன் மற்றும் அவருடன் இருந்த அவரது தந்தை திருமலைநம்பி மற்றும் தனுஷ்கோடி ஆகியோரை அரிவாள் மற்றும் கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தனுஷ்கோடி அளித்த புகாரின் பேரில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ் வழக்கு பதிவு செய்து நம்பி (எ) வெள்ளையன் என்பவரை கைது செய்தார்.


