தூத்துக்குடி மாநகரில் நாளை முதல் சீரான முறையில் வழக்கம் போல் குடிநீர் வழங்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் வழங்கக்கூடிய மூன்றாவது பைப்லைன் அமைந்துள்ள வல்லநாடு பகுதியில் நடைபெற்று வரும் குழாய் மாற்றும் பணிகளையும் கலியாவூர் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் நீரேற்றும் நிலையத்தையும் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், “இந்தப் பணிகளினால் தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் வழங்கக்கூடிய பணிகளில் சிறிது காலம் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நாளை முதல் சீரான முறையில் வழக்கம் போல் குடிநீர் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
ஆய்வின்போது, உடன் பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தம்பி தொ.நிர்மல்ராஜ், மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் ஆய்வாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


