தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில், மாநகரம் 25வது வார்டு பகுதியில் நடைபெற்ற மக்கள் குறை கேட்கும் முகாமில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாமன்ற உறுப்பினர் எடிண்டா, வட்ட பொறுப்பாளர்கள் ரோலண்ட், மரிய ஹான்ஸ், வட்ட பிரதிநிதிகள் ஆவே மரியான், யூஜின், கன்னி மரியாள், அலாய், திரேஸ்புரம் பகுதி இளைஞரணி அமைப்பாளர் ராஜா மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நெப்போலியன், ராமமூர்த்தி, கந்தையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


