தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி தேசியக்கொடி ஊர்வலம் நடைபெற்றது.
பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் நம் வெற்றியை கொண்டாடும் வகையிலும், நம் வீரர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும், பாராட்டுத் தெரிவிக்கும் வகையிலும், தேசியக் கொடிகளுடன் ஆபரேஷன் சிந்தூர் யாத்திரை நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேசியக்கொடி ஊர்வலம் நடைபெற்றது. புதிய மாநகராட்சி முன்பு தொடங்கிய ஊர்வலம் முக்கிய வழியாக சிவன் கோவில் தேரடியை அடைந்தது. ஊர்வலத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
இதில், மாவட்ட தலைவர் சித்ராங்கதன், விவேகம் ரமேஷ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கணல் ஆறுமுகம், செல்வராஜ், மாவட்ட துனை தலைவர்கள் சிவராமன், வாரியார், தங்கம், மாசானம், முத்துராமலிங்கம், நவமணிகண்டன், சரஸ்வதி, மாவட்ட செயலாளர்கள் ஜெயாநாச்சியார், வசந்தி, பானுமதி மோகன், மாவட்ட பொருளாளர் பரமசிவன், மண்டல் தலைவர்கள் ராஜேஷ் கனி, லிங்கசெல்வம், சுதா மாதவன், சங்கர குமாரஜயன்இ பேச்சிதுரை, தங்ககண்ணன், சிவஜோதிபாண்டியன், சரவணன், சங்கர் செல்வசங்கர், நிகழ்ச்சி பொருப்பாளர்கள், ராஜேஷ் சின்னதங்கம் மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்


