
விளாத்திகுளம் அருகே சாலையை கடக்க முயன்றபோது கிரேன் வாகனம் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கொல்லம்பரம்பு கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் பொன்னுசாமி (80). இவர் குளத்தூரில் இருந்து பேருந்தில் வேடநத்தம் சென்றுள்ளார். பேருந்தில் இறங்கி சாலையை கடக்க முயன்ற போது பின்னால் வந்த கிரேன் வாகனம் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த பொன்னுச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய காற்றாலை நிறுவன கிரேன் ஓட்டுனரான வடமாநில இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.