செய்துங்கநல்லூர் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆலய புதிய அறங்காவலராக குரு மாரியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதவி பிரமாணம் மாவட்ட அறங்காவல் தலைவர் பார்த்திபன் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சி கோயில் பிரதோசத்தினை யட்டி நடந்தது. சிவன் மற்றும் அம்பாள் நந்திக்கு சிறப்பு அபிசேகம் , அலங்காரம் ஆராதனை நடந்தது. அதன் பின் கோயில் உள்பிரகாரத்தின் சிவபெருமான் பவனி வந்தார். அதன் பின் முன் மண்டபத்தில் வைத்து பதவி பிரமானம் நடந்தது. மாவட்ட அறங்காவல் குழு தலைவர் பார்த்திபன் புதிய அறங்காவலருக்கு பதவி பிரமானம் செய்து வைத்தார். அப்போது கருங்குளம் ஒன்றிய திமுக செயலாளர் இசக்கி பாண்டியன், இன்ஸ்பெக்டர் நம்பி, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, தி.மு.க பிரமுகர் எம்.பி. முத்துசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
புதிய அறங்காவலர் குரு மாரியப்பனை முக்கிய பிரமுகர்கள் பராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
பூஜை ஏற்பாடுகளை முத்துராமன், பாலா மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆன்மிக பேரவை மற்றும் செய்துங்கநல்லூர் , வி.கோவில்பத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.


