திருநெல்வேலி-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது…
பாலத்தின் பராமரிப்பு பணியாளர்கள் ரசாயனம் பயன்படுத்திய கையுறைகள் மற்றும் பிளாஷ்டிக் கழிவுகளை தாமிரபரணி ஆற்றங்கரையில் கொட்டினர்..
தாமிரபரணி ஆற்றங்கரையில் கொட்டிய ரசாயன கையுறைகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன்…
எனது புகார் அடிப்படையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ரசாயன கையுறைகளை உடனே அகற்ற வேண்டும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவுப்படி தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ரசாயன கையுறைகள் அகற்றப்பட்டு தாமிரபரணி ஆறு தற்போது சுத்தப்படுத்தப்பட்டுள்ளது…


