தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் (17.05.2023) இன்று கருங்குளம் அருகேயுள்ள கிளாக்குளத்தில் நடைபெற்றது.
முகாமினை தெற்கு காரசேரி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.மா.பேபி மாரியப்பன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் திரு.ச.இசக்கி மஹாராஜன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இம்முகாமில் 18 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 4 நபர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா அவர்கள் நன்றி கூறினார்.
இம்முகாமில் எக்ஸ்ரே நுட்பனர் திரு.கிறிஸ்டின் குமாரதாஸ், இருட்டறை உதவியாளர் திரு. எட்டையா, சுகாதார பார்வையாளர் திருமதி.ந.முத்து லட்சுமி, வல்லகுளம் சுகாதார தன்னார்வலர் திருமதி.சுவிதா, திரு.அரி பாலகிருஷ்ணன், டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கிராம வளர்ச்சி அலுவலர் திரு.பாலசுப்ரமணியன், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை ஆகியோர்கள் இணைந்து செய்திருந்தார்கள்.


