சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் இளநீர் குத்தகைக்கு எடுத்தது தொடர்பாக தோட்ட உரிமையாளரை தாக்கியதாக இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள வேலன்புதுக்குளத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் கண்ணன் (47). இவர் தூத்துக்குடியில் உள்ள ஆல் இண்டியா வானொலியில் டெக்னிசியனாக பணி புரிந்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டம் வேலன்புதுக்குளத்தில் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள இளநீர் ஒன்று ரூ19 என கோமானேரியைச் சேர்ந்த நல்லக்கண்ணு மகன் சுரேஷ் என்பவருக்கு குத்தகை கொடுத்துள்ளார். ஆனால் அதற்கான பணத்தை கொடுக்கவில்லையாம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வேலன்புதுக்குளம் வலுக்கு பாலத்தில் சுரேஷும், அவரது நண்பர் வேலன்புதுக்குளத்தைச் சேர்ந்த ராமையா மகன் முத்துபாண்டி என்பவர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கண்ணன் வந்து இளநீர் பணத்தை கேட்டுள்ளார். அவர்கள் இளநீருக்கு ரூ13 தருவதாக தெரிவித்துள்ளனர். இதில் ஏற்பட்ட வாய்த்தகராறில் ஆத்திரமடைந்த சுரேஷ, முத்துபாண்டி , கண்ணனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து கண்ணன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் , நாகராஜன் வழக்குபதிந்து சுரேஷ், முத்துபபாண்டியை தேடி வருகின்றார்


