தூத்துக்குடியில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான கராத்தே போட்டிகளில் பதக்கங்களை வென்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில் உள்ள ஆர்கே கராத்தே பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற பள்ளி மாணவ மாணவிகள் தஞ்சாவூரில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டி மற்றும் நெல்லையில் நடைபெற்ற முதலாவது சர்வதேச அளவிலான ஓபன் கராத்தே போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
இத்தகைய சாதனை படைத்த 20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேசிய அளவிலான மற்றும் சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகளுக்கு தேர்வு பெற்றுள்ளனர். தேர்வு பெற்ற மாணவ மாணவியருக்கு ஆர் கே கராத்தே பள்ளி சார்பில் பாராட்டி சான்றிதழ் அளிக்கப்பட்டது.


