துாத்துக்குடி கே.சின்னத்துரை நிறுவனத்தில் வஉசி கல்லூரி சார்பில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
துாத்துக்குடி மாவட்டத்தில் நுாறு சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஆலோசனையின் பேரில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் துாத்துக்குடி வ.உ.சி. கல்லுாரி, கே.சின்னத்துரை அன்கோ ஜவுளி நிறுவனம் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மக்கள் கூடும் முக்கிய இடமான தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே நடைபெற்றது.
இதில், வ.உ.சி. கல்லுாரி இளைஞர்கள் நலத்துறை மாணவர்கள் தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகள் மூலம் பாடல்கள் பாடி, ஆடி நுாறு சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை வ.உ.சி. கல்லுாரி வீரபாகு முதல்வர் துவக்கி வைத்தார். கல்லுாரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.


