
தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் வட்டாரத்தில் செயல்படும் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் இன்று தூத்துக்குடி மாவட்ட தபால் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் இணைந்து நடத்தும் சிறப்பு ஆதார் முகாம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நடத்தப்பட்டது.கருங்குளம் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி சண்முகப்பிரியா மற்றும் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் திரு உதயசங்கர் முன்னிலையில் முகாம் தொடங்கப்பட்டது.பிற்பகல் 1.30 முதல் 5.30 வரை நடந்தது இம்முகாமில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு புதிய ஆதார் பதிவு செய்யப்பட்டது.மேலும் முகாமில் மேற்பார்வையாளர்கள்,வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் வட்டார திட்ட உதவியாளர் கலந்துக் கொண்டனர்.