
ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் நெல் விதை இரக தேர்வு குறித்த விழிப்புணர்வு ஏரல் தாலுகாவிலுள்ள ராஜபதி கிராமத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் ராபி பருவத்தில் நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். நெல் சாகுபடி செய்யும் போது பெரும் மழை, தண்ணீர் தேக்கம், நோய் மற்றும் பூச்சி தாக்குதல், வறட்சி போன்ற பிரச்சினைகளினால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். இதன் அடிப்படையில், நெல் ஆராய்சி மையங்கள், வேளாண் அறிவியல் மையம், வேளாண்மை பல்கலை கழகங்கள் மூலம் பல்வேறு ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டு புதியவகை நெல் இரககங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அறிமுக படுத்தப்பட்டு வருகிறது. புதியவகை நெல் இரககங்களை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆடியோ கான்பாரன்ஸ் மூலம் ராஜபதி கிராமத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஸ்கேட் வேளாண்மை அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் புதியவகை நெல் இரகங்கள் மற்றும் அவற்றின் நன்மைகள் குறித்து விளக்கிக்கூறினார். இதில் சுமார் 30 நெல் விவசாயிகள் கலந்து பயன்பெற்றனர்.