தென்காசி மாவட்டத்தில் கடந்த சில வருடங்ளாக மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்கம் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ரிலையன்ஸ் அறக்கட்டளை மூலம் ஒருங்கிணைந்த முறையில் படைப்புழுவை கட்டுப்படுத்த ஆலோசனைகளை வழங்கப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக விதை நேர்த்தி குறித்த பயிற்சி திருவேங்கடம் தாலூக்காவிலுள்ள சிவகாமியாபுரம் கிராமத்தில் வைத்து நடைபெற்றது. தோட்டக்கலை துறையின் முன்னாள் துணை இயக்குனர் ராஜகுமார் அவர்கள் விதை நேர்த்தியின் முக்கியத்துவம் மற்றும் அதன் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார். இதில் 30 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.


