செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையான ஆலயம் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் ஆலயம் இந்த ஆலயத்தினை தென் தில்லை என்றும் அழைப்பர்.இந்த ஆலயத்தில் ஆன்மிக பேரரவை சார்பில் 63 நாயன்மார்கள் சிலையை பிரதிட்சை செய்து மிகச்சிறப்பாக பூஜைகளையும் திருவிழாக்களையும் பக்த கோடிகள் செய்து வருகிறார்கள். இந்த ஆலயத்தில் திருநீலகண்ட நாயனார் குருபூஜை நடந்தது. இதையட்டி சிவன், சக்தி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் ஆராதனை நடந்தது. தொடர்ந் திருநீல கண்டனாருக்கும் குருபூஜை சிறப்பு அபிசேகம் அலங்காரத்துடன் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அர்ச்சகர் முத்துராமன் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜை ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


