தூத்துக்குடி மாநகரில் வெள்ளநீர் தேங்கி நிற்கும் பகுதிகளை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி 2வது வார்டுக்கு உட்பட்ட ரஹமத் நகர் பகுதியில் இன்று காலை மழைநீர் தேங்கி நிற்பதை பார்வையிட்ட அமைச்சர் அமைச்சர் கீதாஜீவன் மழை நீரை வெளியேற்றும் பணியை துரிதப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து 17வது வார்டுக்கு உட்பட்ட கோக்கூர், அதனைத் தொடர்ந்து 34 ஆவது வார்டுக்கு உட்பட்ட கந்தன் காலனி, 16வது வார்டுக்கு உட்பட்ட ராஜீவ் நகர் உள்ளிட்ட வெள்ளநீர் தேங்கி நிற்கும் பகுதிகளை பார்வையிட்டு தேவையான மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார்.
அதன் பிறகு தூத்துக்குடி மாநகராட்சி 6வது வார்டுக்கு உட்பட்ட மேல அலங்கார தட்டு மேற்கு பகுதிக்கு சென்ற அமைச்சர் கீதா ஜீவன் அங்கு குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதை பார்வையிட்டு, அங்குள்ள மக்களை சந்தித்து வெள்ள நீரை வெளியேற்ற தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்தார். அதன் பிறகு 15வது வார்டுக்கு உட்பட்ட பசும்பொன் நகர், 35வது வார்டுக்கு உட்பட்ட சங்கர் காலனி, 33வது வார்டுக்கு உட்பட்ட சின்னமணி நகர் ஆகிய பகுதிகளில் தேங்கியிருக்கும் வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியதுடன், மக்களைச் சந்தித்து உரையாடினார்.
இந்த ஆய்வுகளின் போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல் ராஜ், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


