கீழ நாட்டார்குளத்தில்
இலவச பொது மருத்துவ முகாம் மேல ஆழவார் தோப்பு கிராம உதயம் கிளை அலுவலகம், தருவை ஆராய்ச்சி மையம் வைகறை ஹோமியோபதி மருததுவமனை இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம் கீழ நாட்டாடர்குளம் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் கிளை மேலாளர் வேல்முருகன் வரவேற்றார். மருத்துவர்கள் டாக்டர் நந்தினி ஆழ்வார், டாக்டர் பியூலா திலகவதி, டாக்டர் வசந்த், டாக்டர் ஆரியா நுத்ரத், டாக்டர் ராஜ லெட்சுமி ஆகியோர் கல்ந்துகொண்டு பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனை வழங்கினார். இந்த நிகழச்சியில் கிராம உதயத்தினை சேர்ந்த பகுதி பொறுப்பாளர் கண்ணன், ஆனந்த செல்வன், தன்னார்வ தொண்டர் செல்வன் துரை, விஜயகுமாரி, விஜய ஏஞ்சல், லூர்து மேரி, தேவ பூ செல்வி, சூசையம்மாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தன்னார்வ தொண்டர் ஜெயசித்ரா நன்றி கூறினார்.


