தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வருகிற 20ம் தேதி (சனிக்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஊரக கோட்டத்திற்குட்பட்ட மஞ்சள்நீர்காயல் உபமின் நிலையத்தில் 20.09.2025 அன்று மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால், மஞ்சள்நீர்காயல் உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான ஏரல், சிறுதொண்டநல்லூர், வாழவல்லான், உமரிக்காடு, கொற்கை, மாரமங்கலம், இடையற்காடு, இருவப்பபுரம், முக்கானி, பழையகாயல், கோவங்காடு, சாயர்புரம், நட்டாத்தி, பெருங்குளம், சிவகளை, கட்டாலங்குளம் ஆகபிய இடங்களுக்கு காலை 09.00 மணி முதல் மதியம் 16.00 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.
திருவைகுண்டம் உபமின் நிலையத்தில் 20.09.2025 அன்று மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால், திருவைகுண்டம் உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான திருவைகுண்டம், கால்வாய், செய்துங்கநல்லூர், ஆதாளிக்குளம், துரைச்சாமிபுரம், நலன்குடி. வல்லகுளம், மல்லல்புதுக்குளம், காரசேரி, இராமானுஜம்புதூர், பத்மநாபமங்கலம். தோழப்பன்பண்ணை ஆழ்வார்திருநகரி சிவந்திபட்டி ஆகிய இடங்களுக்கு காலை 09.00 மணி முதல் மதியம் 16.00 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.
“ஸ்ரீமூலக்கரை உபமின் நிலையத்தில் 20.09.2025 அன்று மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால், ஸ்ரீமூலக்கரை உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான பேட்மாநகரம், பராக்கிரமபாண்டி, பேரூர், மூலக்கரை, அனியாபரநல்லூர், மீனாட்சிபட்டி, புதுப்பட்டி, அடைக்கலாபுரம், செட்டிமல்லன்பட்டி, சீதாகுளம், சிவகளை, பெருங்குளம், பண்டாரவிளை ஆகிய இடங்களுக்கு காலை 09.00 மணி முதல் மதியம் 16.00 பண்ணைவிளை, மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.
“செய்துங்கநல்லூர் Line Tap உபமின் நிலையத்தில் 20.09.2025 அன்று மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால், செய்துங்கநல்லூர் Line Tap உபமின் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான செய்துங்கநல்லூர், சந்தையடியூர், அனவரதநல்லூர், ஆழிகுடி, முத்தாலாங்குறிச்சி, அய்யனார்குளம்பட்டி ஆகிய இடங்களுக்கு காலை 09.00 மணி முதல் மதியம் 16.00 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.
“நாகலாபுரம் 33/11கிவோ உபமின் நிலையத்தில் 20.09.2025 அன்று பராமரிப்பு நடைபெற உள்ளதால், நாகலாபுரம் உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான நாகலாபுரம், கவுடண் பட்டி, புதூர், பூதாலபுரம், துரைசாமிபுரம், வேடப்பட்டி, அச்சங்குளம், வடமலாபுரம், தாப்பாத்திமுகாம், குருவார்பட்டி, கோடாங்கி பட்டி சுற்றியுள்ள பகுதிகள் ஆகிய இடங்களுக்கு காலை 09.00 மணி முதல் மதியம் 16.00 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.
“வெம்பூர் 33/11கிவோ உபமின் நிலையத்தில் 20.09.2025 அன்று பராமரிப்பு நடைபெற உள்ளதால், வெம்பூர் உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான முத்துசாமிபுரம், மெட்டில்பட்டி, அழகாபுரி, வெம்பூர், மேலகரந்தை, சிவலார்பட்டி, கைலாசபுரம், L.V.புரம், மேலஅருணாசலபுரம், கீழஅருணாசலபுரம், அயன்கரிசல்புரம் சுற்றியுள்ள பகுதிகள் ஆகிய இடங்களுக்கு காலை 09.00 மணி முதல் மதியம் 16.00 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


