ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகிய நாட்களில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்பு பெற்றது. அதிலும் இந்த ஆண்டு ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை வந்தது. அதில் இரண்டாவது அமாவாசையான இன்று மிகவும் சிறப்பு பெற்ற நாள்.
இந்த நிலையில் இன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாமிரபரணி ஆற்றில் அதிகாலை முதலே தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் வந்து தாமிரபரணி ஆற்றுப்படுகையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினர்.
இந்த நிலையில் ஆடி அமாவாசை திருவிழா ஏரல் அருணாசல சுவாமி கோவிலில் சிறப்பாக நடைபெறும். இந்த நிலையில் இன்று ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்த ஏரல் தாமிரபரணி ஆற்றில் நீராடி பின்னர் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமியை வழிபாடு செய்தனர்.


