கால்நடை பராமரிப்புத்துறை பணி தொடர்பாக தவறான தகவலை நம்பி பொது மக்கள் ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கால்நடை பராமரிப்புத் துறையில் 90 மணி நேர பயிற்சி அளித்து ரூ.15ஆயிரம் முதல் ரூ.18ஆயிரம் வரை சம்பளத்தில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது எனவும், இதற்கான பணி நியமன ஆணை ஜீன் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படும் எனவும் ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக பதிவு செய்து கொள்ளுமாறும் மோசடி தகவல் புலனம் சமூக ஊடகம் வழியாக பரவி வருகிறது.
கால்நடை பராமரிப்புத்துறைக்கு சம்பந்தமில்லாத தவறான இந்த தகவலை நம்பி பொது மக்கள் ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


