1888 – நிக்கோலா தெஸ்லா நீண்ட தூரத்திற்கு மாறுதிசை மின்னோட்டம் மூலம் மின்திறன் செலுத்தும் உபகரணம் பற்றிய சொற்பொழிவை நிகழ்த்தினார்.
1891 – செருமனி, பிராங்க்புர்ட் நகரில் இடம்பெற்ற பன்னாட்டு கண்காட்சி ஒன்றில், உலகின் முதலாவது நீண்டதூர உயர்-வலுக் கடத்தி, முத்தறுவாய் மின்னோட்டம் காட்சிப்படுத்தப்பட்டது.
1916 – யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வெசாக் பண்டிகை அங்குள்ள சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டது.[1]
1916 – பிரித்தானியாவும் பிரான்சும் முன்னைநாள் உதுமானியப் பேரரசுப் பகுதிகளான ஈராக்கு மற்றும் சிரியாவைப் இரண்டாகப் பிரிப்பதற்கு இரகசிய உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டன.
1920 – உரோமில் ஜோன் ஆஃப் ஆர்க் திருத்தந்தை 15ம் பெனடிக்ட்டினால் புனிதப்படுத்தப்பட்டார்.
1929 – ஆலிவுடில், முதலாவது அகாதமி விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
1932 – பம்பாயில் இந்துக்களுக்கும் முசுலிம்களுக்கும் இடையே இடம்பெற்ற கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
1943 – பெரும் இன அழிப்பு: போலந்து, வார்சாவா வதைமுகாம் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.
1960 – கலிபோர்னியாவில் இயூசு ஆய்வுகூடத்தில் தியோடோர் மைமான் முதலாவது லேசர் ஒளிக்கதிரை இயக்கினார்.
1966 – சீனாவில் கலாச்சாரப் புரட்சியின் ஆரம்பத்தை சீனப் பொதுவுடமைக் கட்சி அறிவித்தது.
1969 – சோவியத்தின் வெனேரா 5 விண்ணுளவி வெள்ளிக் கோளில் இறங்கியது.
1974 – சோசப்பு பிரோசு டிட்டோ யுகோசுலாவியாவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1975 – பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது.
1975 – ஜூன்கோ டபெய், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதற் பெண் ஆனார்.
1985 – தம்பிலுவில் படுகொலைகள்: இலங்கையின் தம்பிலுவில் கிராமத்தில் அடுத்த மூன்று நாட்களில் 63 வரையான தமிழ் இளைஞர்கள் சிறப்பு அதிரடிப் படையினரால் கொல்லப்பட்டனர்.
1991 – ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணி அமெரிக்க சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலாவது பிரித்தானிய ஆட்சியாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
1992 – எண்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை முடித்து பூமிக்குத் திரும்பியது.
1997 – சயீரின் அரசுத்தலைவர் மொபுட்டு செசெ செக்கோ நாட்டை விட்டு வெளியேறினார்.
2003 – மொரோக்கோவில் காசாபிளாங்காவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 33 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2004 – 30களில் கம்யூனிஸ்டுகளினால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை நினைவுகூர உக்ரேனின் தலைநகர் கீவுக்கு அருகில் உள்ள பிக்கீவ்னியாக் காட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கூடினர்.
2005 – குவைத் பெண்களுக்கான வாக்குரிமையை வழங்கியது.
2006 – தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் கோயில்களில் அர்ச்சகராகத் தகுதி உடையவராக அறிவிக்க மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.
2006 – நியூசிலாந்திற்கருகில் 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.


