தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி சக்தி நகரை சேர்ந்த ஜெயபாண்டியன் மகன் ஜெயக்குமார் (21) என்பவர் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது அருந்தி வந்துள்ளார்.
இதுகுறித்து அவரது அண்ணனான சரவணபெருமாள் (24) என்பவர் கடந்த 14.05.2023 அன்று ஜெயக்குமாரிடம் சத்தம் போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த சரவணபெருமாள், தம்பி ஜெயக்குமாரை அரிவாள் மற்றும் செங்கலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சிவக்குமார் வழக்குபதிவு செய்து எதிரி சரவணபெருமாளை கைது செய்தார்.


