கோவில்பட்டியில் 2 பெண்களிடம் 18 பவுன் தங்கச் செயின்களை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பங்களாத் தெருவைச் சோ்ந்த பழனிசாமி மனைவி பூமா(57). இவா் நேற்று இரவு தனது வீட்டின் முன்பு நாற்காலியில் அமா்ந்திருந்தாராம். அப்போது ஒரே பைக்கில் வந்த இருவா் பூமா கழுத்தில் அணிந்திருந்த பன்னிரெண்டேகால் பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டாா்களாம்.
இதேபோல, கோவில்பட்டி வ.உ.சி. நகரைச் சோ்ந்த மாரிச்செல்வம் மனைவி வெள்ளத்தாய்(44) ஏ.கே.எஸ். தியேட்டா் சாலையில் ஜவுளிக்கடை அருகே உள்ள தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஒரே பைக்கில் வந்த இருவா் வெள்ளத்தாய் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டாா்களாம். இதுகுறித்து அவா்கள் அளித்த புகாரின் பேரில், கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


