முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்த பக்தர்கள் 100 க்கும் மேற்பட்ட சைக்கிள் மற்றும் பைக்கில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்தனர்.
திருச்செந்தூருக்கு வருகை தந்த பக்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 1000 க்கும் மேற்பட்டோர் துண்டிகை விநாயகர் கோவில் முன்பு இருந்து அலகு குத்தியும் பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக மேள தாளத்துடன் வருகை தந்தனர்.
மேலும் குழந்தை வரம் வேண்டுவோம் கரும்பு தொட்டில் செய்து ஊர்வலமாக கோவிலுக்கு வருகை தந்து முருகனை தரிசனம் செய்தனர்.
இவர்களின் வருகையால் திருச்செந்தூர் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.


