கொல்காத்தா சர்வதேச திரைப்பட விழாவில். “திரு” தமிழ் குறும்படம் முதலிடம் பெற்றது. இந்த படத்தினை தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்த அருந்ததி அரசு இயக்கி இருந்தார். ஏற்கனவே இந்த குறும்படம் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லெட்சுமிபதி தலைமையில் அப்போதைய மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாலாஜிசரவணன் முன்னிலையில், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உள்பட பிரபலங்கள் வெளியிட்டனர். திரு படம் கொல்காத்தா சர்வதேச திரைப்பட திருவிழாவில் திரு தமிழ் குறும்படம் முதலிடம் பெற்றதை முன்னிட்டு தற்போது முதல்வரின் இணைச்செயலாளராக பணியாற்றி வரும் லெட்சுமிபதி அவர்களை குழுவினர் சந்தித்தனர். அவர்களை முதல்வரின் இணைச்செயலாளர் லெட்சுமிபதி பாராட்டினார். அப்போது திரைப்பட இயக்குனர் அருந்ததி அரசு, திரை கலைஞர்கள் பாலா, மாரிமுத்து, சலீம் ஷா, உதவி இயக்குனர்கள் முத்து, மணிகண்டன், உதயகுமார் நிர்வாக மேற்பார்வையாளர் மைக்கேல் ஜெரோம் ஆகியோர் கலந்துகொண்டனர்.


