முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தவழ்ந்து வரும் தாமிரபரணி என்னும் நூல் சிறப்பு வாய்ந்தது. கடந்த வாரம் இந்த நூல் பொன்சொர்ணா பதிப்பகம் மூலமாக வெளியிடப்பட்டது. தாமிரபரணி தோன்றும் பொதிகை மலையில் இருந்து புன்னகாயல் வரை உள்ள சரித்திர சான்றுகளை இந்த நூலில் ஆசிரியர் குறிப்பிட்டு உள்ளார். நதிக்கரையோரத்து கல்வெட்டுக்கள், அணைக்கட்டுகள், மண்டபங்கள், திருப்புடை மருதூர் மரச்சிற்பம், கிருஷ்ணாபுரம் கலைச்சிற்பம், ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கடந்த 222 வருடங்களாக நெல்லை மாவட்டத்தில் பணி செய்ய, மாவட்ட ஆட்சி தலைவர்கள் பெயர் பட்டியல், தாமிபரணி அழிவு, அதை காப்பாற்ற நடவடிக்கை எடுத்து வரும் சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர்கள், அரசுஅலுவலர்கள், பொதுமக்கள், அரசியல் வாதிகள் என படத்துடன் பட்டியலிட்டுள்ளார் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு. 14 ந்தேதி நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு அவர்களிடம் இந்த நூல் அறிமுகப்படுத்தப்பட்டது. 15 ந்தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சி தலைவர் மரு. கி. செந்தில் ராஜ் அவர்களிடம் இந்த நூலை அறிமுகம் செய்தார் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு. அருகில் மாவட்ட வன அலுவலர் அபிசேக் டோமர், மாவட்ட வருவாய் அலுவலர் மரு. கண்ணபிரான், உதவி ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நூல் வேண்டுவோர் 8760970002 என்ற நூலில் தொடர்பு கொள்ளலாம்.


