கருங்குளத்தில் கோவில் கும்பாபிஷேக பணியின் போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரிக் கடை ஊழியர் பலி.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் யாதவர் தெருவைச் சேர்ந்தவர் ஈனமுத்து. இவரது மகன் இசக்கிராஜ்(38). இவர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ராமு என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் கருங்குளம் மேலகுளத்துக்கரை இசக்கியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. இதற்காக தோரணம் கட்டும் பணியில் நேற்று இரவு இசக்கிராஜ் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி இசக்கிராஜ் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக செய்துங்கநல்லூர் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


