ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என 2020 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் உலகத்தரம் வாய்ந்த ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம்அமைக்க அறிவிக்கப்பட்டது. அதன் பின் இந்தியாவிலேயே முதல் சைட் மியூசியம் ஆதிச்சநல்லூரில்அமைந்தது. இதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கனிமொழி எம்பி. முன்னிலையில் திறந்து வைத்தார். உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் கடந்த 5.08.2023அன்று நட்டப்பட்டது.
இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறாமல இருந்தது. இதற்கிடையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேதி மத்திய பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் மற்றும் சுற்றுலா மேம்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் தொய்வு விழுந்த பணிகள் மீண்டும் துவக்கப்பட்டது.
இந்த நிலையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் இடத்தைச் சுற்றி இரும்பு வேலிகள் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அறவாழி தலைமை வகித்தார்.முதல் கட்டமாக ரூபாய் 80 லட்சம் மதிப்பில் தொடங்க உள்ளது. அதைத் தொடர்ந்து ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் நடந்து வரும் சி சைட் இடத்தில் அகழாய்வு பணிகள் நடந்த இடத்தை பாதுகாக்க ரூபாய் 90 லட்சம் மதிப்பில் மேற்கூரைகள் அமைக்கப்பட உள்ளது.

செய்தியாளர்களிடம் தொல்லியல் துறை இயக்குநர் அறவாழி பேசுகையில், உள்ளூர் மக்களால் மத்திய தொல்லியல் துறைக்கு வழங்கப்பட்ட ஆதிச்சநல்லூர் இடத்தில் பாதுகாக்கும் பொருட்டு முதல் கட்டமாக 80லட்சம் செலவில் சுற்றுவேலி அமைக்கப்பட உள்ளது. அதற்கு அதற்கானபூமி பூஜை துவங்கியுள்ளது. ஆதிச்சநல்லூரில் சி சைட்டில் 90 லட்சம்செலவில் மேற்கூரை அமைக்கும் பணி விரைவில் துவங்கஉள்ளது. மேலும் சைட் மியுசியம் உலக தரத்தில் உருவாக அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். இதற்கிடையில் கலாச்சார மையம் என்பது அருங்காட்சியகம் அல்ல, தமிழர்களின் கலாச்சாரகளை பிரமாண்டமான காட்சிப்படுத்தும் விதமாக அந்த மையம் உலக தரத்தில் அமையும். அதற்கான பணிகளும் விரைவில் துவங்க உள்ளது என்றார்.
அவருடன்பொறியாளர் சரவணன், துணை கண்காணிப்பாளர் ராணி மோல், திருச்சி மண்டல பராமரிப்பு அலுவலர் சங்கர், தொல்லியல் துறையை சேர்ந்த தயாநிதி, வெங்கடேஷ், அந்தோணி, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, முன்னால் பஞ்சாயத்து தலைவர் சங்கர் கணேஷ், சுப்பிரமணியன், செந்தில், உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட அருங்காட்சியகப் பணிகள் முதல் கட்ட வேலைகள் தொடங்கியுள்ளதால் சமூக ஆர்வலர் மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


