செய்துங்கநல்லூர் நூலகத்தில் திருவள்ளூவர் தினவிழாவை முன்னிட்டு திருக்குறள் எழுதும் நிகழ்ச்சி நடந்தது. திருவள்ளுவர் தின விழாவை முன்னிட்டு தொடர்ந்து 48 ஆண்டுகளாக திருக்குறளை ஒவ்வொரு நூலகம் தோறும் எழுதி வரும் ஓவியர் வள்ளிநாயகம் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார் “நவில்தோறும் நூல்நயம் போலும்…” என்ற திருக்குறளை செய்துங்கநல்லூர் நூலக சுவரில் எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு செய்துங்கநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் அஜய் குமார் தலைமை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்றார். நிகழ்ச்சியில் வாசகர் வட்ட தலைவர் திருமலை முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அப்துல் காதர், அப்துல், அப்பாஸ், நூலகர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நூலகர் சம்சுதீன் நன்றி கூறினார் .


