செய்துங்கநல்லூர் பீமா அம்மா – மாகீன் அபுபக்கர் ஒலியுல்லாக்களின் 83 வது ஆண்டு மத நல்லிணக்க கந்தூரி விழா நடந்தது. முகம்மது நபி அவர்களின் வழித் தோன்றளாக உதித்து கேரள நன்னாட்டில் தீன் சேவையாற்றி திருவனந்த புரம் பூந்துறையில் மக்களுக்கு நல் ஆசி வழங்கி வரும் அவுலியாக்களின் நினைவாக தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் இருக்கும் பீமா அம்மா மகீன் அபு பக்கர் ஒலியுல்லா தைக்காவில் நடந்தது. இதையொட்டி முதல் நாள் மாலை மக்ரீபு தொழுகைக்கு பிறகு கொடி ஊர்வலம் ஆரம்பித்தது. இந்த ஊர்வலம் ஊர் சுற்றி வந்தது. அதன் பின் இரவு 9 மணிக்கு அரண்மனை கொடி ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து திக்ரு மஜ்லீஸ் நடை பெற்றது. தொடர்ந்து விளக்கு ராத்திரி நடந்தது. மறுநாள் காலை தப்ரூக் எனும் நேர்ச்சை வழங்கப்பட்டது. முகைதீன் ஜாமியா பள்ளிவாசல் இமாம் ஹசன் ஞானியார் வைஜி, திருநெல்வேலி சந்திப்பு எம்.என். எச் இமாம் சேக் அப்துல் காதிர் உஸ்மானி, பீமா தர்கா அறங்காவலர் முகம்மது ராபி ரஷிதி, சந்தை பக்கீர் மஸ்தான் த்ர்கா நிர்வாகி ஷேக் அசன் அலியார் ஸமதானி ஆகியோர் திக்ரு மஜ்லீஸ் நடத்தினர். விழா ஏற்பாடுகளை பீமா தர்கா விழா அறங்காவலர் குழு பொறுப்பாளர் மற்றும் செயலாளர் கே.எஸ்.புகாரி தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.


