தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாகத் திருச்செந்தூரில் 34.40 மி.மீ., காயல்பட்டினத்தில் 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழைத் தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ள நிலையில், மழை காரணமாக ஒரு குடிசை சேதமடைந்துள்ளதுடன் 3 ஆடுகள் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று 15-ம் தேதி காலை 6:30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை மழை அளவுகளின் விவரங்கள்:
காயல்பட்டினம்: 40.00 மி.மீ.
திருச்செந்தூர்: 34.40 மி.மீ.
குலசேகரப்பட்டினம்: 30.00 மி.மீ.
சாத்தான்குளம்: 13.40 மி.மீ.
வைப்பார்: 7.00 மி.மீ.
ஸ்ரீவைகுண்டம்: 6.20 மி.மீ.
சூரங்குடி: 6.00 மி.மீ.
தூத்துக்குடி: 5.10 மி.மீ.
ஒட்டப்பிடாரம்: 2.00 மி.மீ.
ஒட்டுமொத்தமாக மாவட்டத்தில் 144.10 மி.மீ. மழையும், சராரியாக 7.58 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மேலும், கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு, கடம்பூர், எட்டயபுரம், விளாத்திகுளம், கடல்குடி, மணியாச்சி, வேடநத்தம் மற்றும் கீழாரசடி ஆகிய பகுதிகளில் மழை எதுவும் பதிவாகவில்லை.


