தூத்துக்குடியில் ஐ.என்.டி.யு.சியுடன் இணைக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில், தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி- யுடன் இணைக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் சார்பில் , எதிர் வரும் டிசம்பர் 17-ஆம் நாள் நடைபெறவுள்ள மாவட்ட மாநாடு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் இன்று அமைப்பு சாரா தொழிற்சங்க அலுவலகத்தில் ஐ.என்.டி.யு.சியின் மாநில அமைப்புச் செயலாளர் ராஜ் தலைமையில் நடைபெற்றது. மதுரா கோட்ஸ் ஐ.என்.டி.யு.சி தலைவர் சுடலை மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் அ.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைப்பு சாரா தொழிற்சங்கம் சார்பில் சூலான், தூத்துக்குடி அனல் மின் நிலைய ஐ.என்.டி.யு.சி யின் வரதராஜ், உப்பள தொழிற்சங்கங்களை சார்ந்த ஜான் பிரிட்டோ, ஆதிலட்சுமி, ஆறுமுகநேரி தாரங்க தாரா கெமிக்கல் ஒர்க்ஸ் ஐ.என்.டி.யு.சியின் நிர்வாகி இராமச்சந்திரன், ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் முருகராஜ் மற்றும் பரமசிவம், தமிழ்நாடு போக்குவரத்து கழக ஐ.என்.டி.யு.சி நிர்வாகிகள் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் கலந்து ஆலோசித்து மாநாட்டினை சிறப்புற நடத்த தீர்மானிக்கபட்டது.


