கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற அமாவாசை சிறப்புப் பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோடில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்புப் பூஜை நடைபெற்றது . இதனையொட்டி சந்தன கருப்பசாமிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது. பக்தர்கள் தடியங்காய் தீபம் ஏற்றி வழிபட்டனர். பூஜைகளை சுப்பிரமணிய சுவாமி செய்தார். ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல் செயலாளர் மாரிச்சாமி பொருளாளர் லட்சுமனன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர். இதில் சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


