
தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் அக்.16ஆம் தேதி வரை மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ். வெளியிட்ட செய்திக் குறிப்பு: மன்னார் வளைகுடா, குமரி கடற்பகுதி, கேரள கடற்பகுதி, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு கடற்பகுதிகளில் அக்.14 (வியாழக்கிழமை) 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், 15 மற்றும் 16ஆம் தேதிகளில் தென்மேற்கு வங்காள விரிகுடா, குமரி கடற்பகுதி, மன்னார் வளைகுடா, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு கடற்பகுதிகளில் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் அக்.16ஆம் தேதி வரை மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.