தூத்துக்குடி சக்தி விநாயகர் பள்ளியில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
தூத்துக்குடி சக்தி விநாயகர் பள்ளியில் சுதந்திர தின விழாவை கொண்டாடும் பதிவு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்து பல்வேறு இன்னல்களை அனுபவித்து நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகிகளை கௌரவிக்கும் வகையில் அவர்களது புகைப்படம் மற்றும் அவர்கள் கலந்து கொண்ட போராட்ட வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
தூத்துக்குடியைச் சேர்ந்த 117 தியாகிகளில் புகைப்படம் மற்றும் அவர்களது சுதந்திரப் போராட்ட வரலாறு இடம்பெற்று இருந்தது. மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் கலை பண்பாடு கலாச்சாரம் மற்றும் விவசாயம் தொழில் ஆகியவை குறித்த கண்காட்சியும் இடம்பெற்று இருந்தது. புகைப்பட கண்காட்சியை பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர், மேலும் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


