சாத்தான்குளம் அருகே நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி வடிவிலான இனிப்பு பிஸ்கட் தயாரித்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கல்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளக்குறிச்சி பஞ்சாயத்து தலைவரும் பிரபல ஸ்வீட் கடை அதிபருமான சித்திராங்கதன் இன்று நாட்டின் 75வது சுதந்திர தின விழா அனுசரிக்கப்படுவதையொட்டி அவரது பேக்கரியில் தேசியக்கொடி வடிவிலான சிறப்பு பிஸ்கட்டை தயார் செய்து, அதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு வாசிகளுக்கு சுதந்திர தின வாழ்த்தை இனிப்புடன் தெரிவிக்கும் வகையில் வழங்கினார். மேலும் சுதந்திர தின விழாவை வித்தியாசமான முறையில் தெரிவித்து சுதந்திர தின வாழ்த்து கூறி வரும் பஞ்சாயத்து தலைவர் சித்திராங்கதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.


