சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 75 வது சுதந்திர விழா சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 75 வது சுதந்திர விழா எளிய முறையில் சமூக இடைவெளியுடன் அரசு அறிவிப்பின் ULO கொண்டாடப்பட்டது . திருச்செந்தூர் கோட்டம் செயற்பொறியாளர் திரு . பாக்கியராஜ் தலையேற்று தேசிய கொடி ஏற்றி தலைவர் உரையாற்றினார் . பள்ளி ஆசிரியர்களால் இறைவணக்கம் , தமிழ்தாய் வாழ்த்து , கொடிப்பாடல் பாடப்பட்டது . பள்ளி முதல்வர் அருட்தந்தை பேட்ரிக் அந்தோணி விஜயன் அனைவரையும் வரவேற்றார் . 2020-2021 கல்வி ஆண்டில் நடைபெற்ற ஆன்லைன் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு மன்னார்புரம் பங்கு தந்தை அருட்தந்தை எட்வர்ட்.ஜே அவர்கள் பரிசுகளை வழங்கினார் . சாத்தான்குளம் வட்டார முதன்மை குரு மற்றும் பள்ளி தாளாளர் பேரருட்தந்தை . ஜோசப் ரவிபாலன் வாழ்த்துரை ஆற்றினார் . தேசிய கீதத்துடன் சுதந்திர தினம் நிறைவுப் பெற்றது . கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது


