காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கருங்குளம் காமராஜர் தெருவில் வசிக்கும் பனையோலை கலைஞர் பால்நாடார், தான் பனை ஓலையால் உருவாக்கிய காமராஜர் சிலையை பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளார். அதை பார்வையிட வந்த மக்கள் அவருக்கு மலர் மாலை அணிவித்து வணங்கி செல்கின்றனர்.
இது குறித்து பால்பாண்டி நாடார் கூறும் போது, நான் 100 க்கான பொருள்கள் பனையோலையால் செய்துள்ளேன். குறிப்பாக காமராஜர், மோடி, அப்துல்காலம், ஜெயலலிதா, கலைஞர் போன்றவர்கள் உருவங்களை பனையோலையில் செய்துள்ளேன். இன்று காமராஜர் பிறந்த நாள்விழாவை முன்னிட்டு காமராஜர் சிலையை பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளேன். இதை காண ஏரளமான பொதுமக்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். இது எனக்கு பெருமையாக உள்ளது என்று கூறினார்.


