செம்மறி குளத்தில் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் 10ஆயிரம் மரக்கன்றுகள் நடுப் பணியை உடன்குடி யூனியன் சேர்மன்பாலசிங் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் 33% மரங்கள் இருக்க வேண்டும். ஆனால் 23 சதவீதம் மட்டுமே மரங்கள் உள்ளன. அதிலும் தூத்துக்குடி மாவட்டத்தில் மரங்கள் மிகவும் குறைந்து 4.5% மட்டுமே உள்ளன.அதனை அதிகப்படுத்தும் விதமாக. தூத்துக்குடி மாவட்டத்தில் 33 சதவிகித மரங்கள் கொண்ட காடுகளை உருவாக்க மதர் சமூக சேவை நிறுவனம் பல்வேறு முயற்சியை எடுத்துள்ளது. அதான் தொடர்ச்சியாக தூய்மை இந்தியா இரு வார கால அனுசரிப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாயிரம் மரக்கன்று நடுப் பணி செம்மறி குளம் அருகே உள்ள சத்யா நகரில் அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் புறம்போக்கு இடத்தில் வைத்து தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமை தாங்கினார். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி முன்னிலை வைத்தார். சிறப்பு விருந்தினராக உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் மரக்கன்று நட்டு பணியை தொடங்கி வைத்தார். மரக்கன்றுகள் நடும்பணி தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்துகளிலும் , கல்லூரி மற்றும் பள்ளி வளாகங்களிலும், அரசு புறம்போக்கு இடங்களிலும் நடைபெறுகிறது. இதில் வள்ளியம்மாள் புரத்தைச் சார்ந்த மதர் அழகு பனைப் பொருள் உற்பத்தியாளர் குழு தலைவர் சரோஜா, செயலாளர் சந்திரா, பொருளாளர் ராஜேஸ்வரி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன அலுவலர்கள், லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


