கலீலியோ கலிலி இந்த இத்தாலிய மேதைதான் அறிவியலின் மறுமலர்ச்சிக்குக் காரணம். முதலில் கணிதம் மேல் ஆர்வம்கொண்ட இவர் மெல்ல மெல்ல வானியல் மேல் ஆர்வம்கொண்டு வானியல் ஆய்வுகளை மேற்கொண்டார். கலீலியோவின் ஆய்வுக்கு அவர் உருவாக்கிய தொலைநோக்கிப் பெரும் உதவிகரமாக இருந்தது. கலீலியோ முதலில் 3x அளவுக்குப் பெரிதுபடுத்திப் பார்ப்பதற்கு ஏதுவாக உள்ள தொலைநோக்கிகளை உருவாக்கினார், பின்னர் 3௦x அளவுக்குப் பெரிதுபடுத்தி பார்க்கக்கூடிய தொலைநோக்கிகளை உருவாக்கினார்.கடலில் வாணிபம் செய்பவர்களுக்கு அதற்கேற்ற தொலைநோக்கிகள் செய்து கொடுத்தார் .1610-ம் ஆண்டு ஜனவரியில் இவர் கண்டுபிடித்த தொலைநோக்கிகள் மூலம் இவர் வியாழனின் துணைக்கோள்களைக் கண்டறிந்தார். அவை வியாழனை மையம் கொண்டு நகர்கிறது என்று அவர் கண்டுபிடிக்க சில நாள்கள் எடுத்துக்கொண்டார். இவர் கண்டுபிடித்த திசைகாட்டியும் ஆய்வுகளுக்குப் பெரிதும் உதவிகரமாக இருந்தது.
இது மட்டுமின்றி பல வானியல் நிகழ்வுகளைத் தொலைநோக்கி மூலம் கண்டறிந்து உறுதிபடுத்தினார். 1610-ம் ஆண்டு வெள்ளி, நிலவு போல் பல்வேறு விதமான பரிமாணங்களில் தோன்றுவதையும் மறைவதையும் கண்டார். சனி கோளை சுற்றியுள்ள வளையத்தைக் கண்டறிந்தார், ஆனால், அவர் அதை வேறொரு கிரகமாகத் தவறாகக் கணித்துக்கொண்டார், பின்னர் அது சனி கோளை சுற்றியுள்ள வளையம் என்று கண்டறிந்தார். பின்னர் நெப்டியூன் கோளை கண்டறிந்தார், ஆனால், அதை அவர் நட்சத்திரம் என எண்ணினார். சூரியனின் கரும்புள்ளிகளை ஆய்வு செய்தார்.
பைசாவின் சாய்ந்த கோபுரத்தின் மேல் நின்று இவர் நிகழ்த்திய விழும் பொருள்கள் குறித்த ஆய்வு, பல காலமாக அரிஸ்டாட்டில் கூறிய கருத்தை உடைத்தது. “ஒரே நேரத்தில் கனமான பொருள் கனமில்லா பொருள் ஆகியவற்றை விழச்செய்யும்போது கனமான பொருள் முதலில் கீழே விழும், பின்னர்தான் கனமில்லா பொருள் கீழே விழும்” என்பது அரிஸ்டாட்டில் கூற்று. இவர் சாய்ந்த கோபுரத்தின் மேல் நின்று வெவ்வேறு நிறைகளையுடைய பொருள்களைக் கீழே விழச்செய்து, பொருள்கள் கீழே விழும் நேரத்திற்கும், அதன் நிறைக்கும் தொடர்பில்லை என்று கூறினார்.
அவர் வாழ்ந்த காலம் வானியல், பூமி அமைப்பு என அறிவியல் துறைகள் அனைத்துமே மதத்துடன் பின்னிப்பிணைந்திருந்தது. புதிய கோட்பாடு, புதிய எண்ணங்கள், புதிய கருத்துகள் எனப் புதிதாக யார் எதை முன்வைத்தாலும் அவை மதத்திற்கு எதிரானவை என அதனை முன்மொழிந்தோர் தண்டிக்கப்பட்டனர். பூமிதான் அண்டத்தின் மையம் என்றும் அதனைச் சுற்றித்தான் பிற கோள்கள் வலம் வருகின்றன என்று கூறப்பட்டு அது மத நம்பிக்கையாகவும் பின்பற்றப்பட்டு வந்தது. இந்த புவிமையக்கோட்பாடு (ஜியோ சென்ட்ரிக்)தான் பல நூற்றாண்டுகளாகக் (கிட்டத்தட்ட 1500 ஆண்டுகள்) பின்பற்றப்பட்டு வந்தது.
3-ம் நூற்றாண்டில் அரிஸ்டாட்டில் என்கிற கிரேக்க வானியலாளர் முதன்முதலாகப் புவி சூரியனைச் சுற்றிவருகிறது என்று தன் கோட்பாட்டை முன்வைத்தார், ஆனால், அது அப்போது நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பின்னர் 16-ம் நூற்றாண்டில் கோபர்நிக்கஸ் என்கிற வானியலாளர் புவிமையக்கோட்பாட்டை முன்வைத்தார். இவரின் கருத்தையும் அப்போது யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. இதை எதிர்த்த மத நம்பிக்கையுடைய மற்ற வானவியலாளர்கள் வெவ்வேறு கோட்பாட்டை முன்வைத்தனர். ஏனென்றால் பைபிளிள் “உலகம் நிலையானது, அசையாதது” எனக் கூறப்பட்டது. டைக்கோ பிராஹே என்கிற வானவியலாளர் கோபர்நிக்கஸின் புவிமையக்கோட்பாட்டை ஆதரித்தார், ஆனால், மத நம்பிக்கையுடைய அவரால் அதை முழுதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சூரியனும் நிலவும் பூமியைச் சுற்றி வருகின்றன, மீதமுள்ள கோள்கள் சூரியனை வேறொரு பாதையில் சுற்றிவருகின்றன என்றார்.
இவ்வாறாக அண்ட அமைப்பை பற்றியும் புவியின் அமைப்பைப் பற்றியும் பல விதமான குழப்பங்கள் இருந்த நிலையில், கலீலியோ கண்டுபிடித்த தொலைநோக்கிகள் மூலம் பல குழப்பங்களை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார். சூரியமையக்கோட்பாட்டை ஆதரித்ததால், அது கிறித்துவ மதச்சமயத்துக்கு எதிரானது எனவும், மதநம்பிக்கைக்கு எதிராகச் செயல்பட்டதைக் குற்றம் எனவும் கருதி கத்தோலிக்க திருச்சபையால் அவர் 1633-ம் ஆண்டு முதல் சாகும் வரை வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். 1642-ம் ஆண்டு இருதயக் கோளாறு காரணமாக இயற்கை எய்தினார். சிறைவைக்கப்பட்ட கடைசி ஒன்பதாண்டுக் காலத்தில்தான் ஆரம்ப காலத்தில் மேற்கொண்ட பொருள்களின் இயக்கம் குறித்த சோதனைகளை (Motion Of Experiments) எழுதி வைத்தார். அவரின் குறிப்புகள் அறிவியலின் மறுமலர்ச்சிக்கு பெரிதும் துணையாக இருந்தது. அந்த மேதையின் பிறந்தநாள் இன்று