மழை மற்றும் வெள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு இன்றும் நாளையும் வெளியூரிலிருந்து பொதுமக்கள் வருவதைத் தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும் திருநெல்வேலி மற்றும் மருதூர் அணைக்கட்டிலிருந்து சுமார் 61 ஆயிரம் கன அடி நீரும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து சுமார் 54,000 கன அடி நீரும் உப்பாற்று ஓடையில் சுமார் 11 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கனமழையின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் செல்வதால் மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையும் திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையும், ஏரல் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையிலும் மழை வெள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே மழை மற்றும் வெள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருச்செந்தூர் கோவிலுக்கு இன்று நாளையும் (14, 15-12-2024) வெளியூரில் இருந்து பொதுமக்கள் வருவதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் தலைவர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.