2வருடம் கழித்து நாளை 15 ந்தேதி திருச்செந்தூர் & பழனி ரயில் இயக்கப்படுகிறது. இந்த இரயில் முன்பு பாஸஞ்சர் ரயிலாக இயக்கப்பட்டு வந்தது. கடந்த கொரோனா காலத்தில் இந்த ரயில் நிறுத்தப்பட்டது. தற்போது இந்த ரயில் நாளை முதல் விரைவு ரயிலாக இயக்கப்படுகிறது. இந்த ரயில் காலை 6.40 மணிககு பொள்ளாச்சியில் இருந்து கிளம்பி பழனி வழியாக 3.45க்கு திருச்செந்தூரை வந்தடைகிறது. , மற்றொரு தடத்தில் மதியில் 12.5க்கு கிளம்பி இரவு 8 மணிக்கு பொள்ளாச்சியை சென்றடைகிறது. இந்த விரைவு ரயில் திருச்செந்தூர் விரைவு ரயில் நின்று செல்லும் செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சந்திப்பு ரயில் நிலையத்தில் நின்று செல்லாது என இரயில்வே துறை அறிவித்துள்ளது.
மேலும் இந்த ரயிலில் சாதாரண பயணிகளுக்கான பெட்டியும் இணைக்கப்படவில்லை இதனால் பயணிகள் வேதனை அடைந்துள்ளனர். இதற்கிடையில் செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமையில் செய்துங்கநல்லூரிலும், தாதன்குளம் பஞ்சாயத்து தலைவர் சீதாலெட்சுமி தலைமையில் தாதன்குளம் ரயில் நிலையத்திலும் பொதுமக்களை திரட்டி மறியல் செய்ய போவதாக அறிவித்து இருந்தனர். இதனால் பரபரப்பு நிலவி வந்தது.
இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்த்ராஜ், தூத்துக்குடி எம்.பி கனிமொழி அவர்களிடம் தொடர்ப்பு கொண்டு பேசினார். கனிமொழி எம்.பி. ரயில்வே அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்த நிலையில் பழனி – திருச்செந்தூர் எகஸ்பிரஸ் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை ரயில் வராத காரணத்தினால் போராட்ட குழுவினர் மறியல் போராட்டத்தினை ஒத்தி வைத்தனர்.
இது குறித்து செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் கூறும் போது, செய்துங்கநல்லூர் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் மிக முக்கிய ரயில் நிலையமாகும். இந்த இரண்டு ரயில் நிலையத்தில் கிராஸிங் ரயில்கள் நின்று செல்லும் வசதியும் உள்ளது. முன்பதிவு வசதியும் உள்ளது. திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்திலும் நின்று செல்கிறது. அப்படி இருக்கும் போது செய்துங்கநல்லூரையும், தாதன்குளத்தினையும், ஸ்ரீவைகுண்டத்தினையும் புறக்கணிப்பது வேதனைக்குரிய விஜயமாகும். எனவே எங்கள் ஊரில் 15 ந்தேதி ரயில் நிற்கவில்லை என்றால் பொதுமக்களை கூட்டி செய்துங்கநல்லூர் ரயில் நிலையில் பழனி ரயிலை மறிப்போம் என கூறியிருந்தோம். இதற்கிடையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்த்ராஜ், தூத்துககுடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோரின் முயற்சியில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் முறையாக செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம் உள்பட ரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவே தற்போது நாளை இயங்க இருந்த ரயிலை நிறுத்தியிருக்கிறார்கள் என நினைக்கிறோம். எனவே விரைவில் செய்துங்கநல்லூர் ,ஸ்ரீவைகுண்டம், தாதன்குளத்தில் இந்த ரயில் நின்று செல்லும் படி இயக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
————————–