சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள் ஆய்வகங்கள் கட்டுவதற்கும் புதிய பாடப்பிரிவுகள் கொண்டு வருவதற்கும் ஶ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர்.ஊர்வசி.அமிர்தராஜ் சென்னையில் உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர்.கார்த்திகேயன் . கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரணச்சந்திரன் இருவரிடமும் சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 30 ஏக்கர் நிலம் உள்ளது. 1400 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பல்கலைக்கழக அளவில் கல்வி தரவரிசையில் இடம் பெற்றுள்ள கல்லூரி ஆகும். இதில் கிராமப்புறத்தில் இருந்து பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவிகள் கல்வி பயின்று வருகின்றார்கள். மாணவிகள் கல்வி பெறுவதற்கு போதுமான வகுப்பறை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. கல்லூரி அமைந்துள்ள இடத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றளவில் எந்த அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் கிடையாது. சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதியிலிருந்து வருடத்திற்கு சுமார் 1500க்கும் மேற்பட்ட கிராமப்புற சமூகத்தில் பின்தங்கிய மாணவிகள் இக்கல்லூரியில் பயில்வதற்கு விண்ணப்பிக்கின்றனர். ஆனால் 350 மாணவிகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு செய்வதற்கு பாடப்பிரிவுகள் உள்ளன. எனவே பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற மாணவிகள் உயர் கல்வி பெற முடியாத சூழல் உள்ளது. எனவே சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதி பெண்கள் இளநிலை பட்டப்படிப்பு பயில்வதற்கும் முதுநிலை பட்டப்படிப்பு பயில்வதற்கும் புதிய பாடப் பிரிவுகள் மற்றும் வகுப்பறை கட்டிடங்கள் ஆய்வகங்கள் அமைத்து தர வேண்டும். என்று நேரில் சென்று கீழ்க்கண்ட கோரிக்கைகளை வைத்துள்ளார்கள்.
1. 20 புதிய வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் ஆய்வக கட்டிடம் கட்டுதல்
2. இளநிலை கல்வி பாடப் பிரிவுகளான (கலை பாடப்பிரிவுகள்)
B.A. வரலாறு
B.A. பொருளியல்
B.A. சமூகவியல்
B.A. புள்ளியல்
B.A. உளவியல்
B.A. மண்ணியல்
(அறிவியல் பாடப் பிரிவுகள்)
Bsc -இயற்பியல்
Bsc -வேதியியல்
Bsc -தாவரவியல்
Bsc -விலங்கியல்
3. முதுநிலை பாடப்பிரிவுகள்
M.A -தமிழ்
M.B.A -வணிக நிர்வாகவியல்
MSC- கணினி அறிவியல்
PHD – Commerce centre


