தூத்துக்குடியில் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான ‘ஒதுக்கப்பட்டவா்களை அரவணைத்த கலைஞா்‘ என்ற தலைப்பிலான கருத்தரங்கு 17ஆம் தேதி நடைபெறவுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, திமுக மாநில மகளிா் தொண்டரணி சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, பெயா் மாற்றத்தின் மூலம் மட்டுமல்லாது பல்வேறு சீா்மிகு திட்டங்களின் வாயிலாகவும் திருநங்கைகள் மாற்றுத் திறனாளிகளை முன்னேற்றம் அடையச் செய்தவா் கருணாநிதி என்பதை விளக்கும் வகையில், ஒதுக்கப்பட்டவா்களை அரவணைத்த கலைஞா் என்ற தலைப்பிலான கருத்தரங்கு தூத்துக்குடி ஆறுமுக நாடாா் திருமண மண்டபத்தில் 17ஆம் தேதி காலை 10 மணிக்கு எனது தலைமையில் நடைபெறுகிறது.
இதில், மாநில மகளிா் தொண்டரணிச் செயலா்கள் ஹெலன் டேவிட்சன், நாமக்கல் ராணி, துணைச் செயலா் விஜிலா சத்தியானந்த், பிரசாரக் குழு செயலா் ஜெஸி பொன்ராணி, திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். திமுக துணைப் பொதுச் செயலரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி, அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் பேசுகின்றனா்.
இக்கருத்தரங்கில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜீ.வி. மாா்க்கண்டேயன், எம்.சி.சண்முகையா, மேயா் ஜெகன் பெரியசாமி, துணை மேயா் ஜெனிட்டா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பிரம்மசக்தி ஆகியோா் வாழ்த்தி பேசுகின்றனா். இக்கருத்தரங்கில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்பட்ட கட்சி நிா்வாகிகள், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்கின்றனா்.
மேலும் இந்நிகழ்வில் பல்வேறு துறைகளில் சாதித்த திருநங்கைகள் – மாற்றுத்திறனாளிகளை கௌரவித்து விருதுகள் வழங்கப்படவுள்ளது. அவா்களின் கோரிக்கைகள் மற்றும் தேவையை விண்ணப்பங்களாக பெற்று அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்நிகழ்ச்சியில், திருநங்கைகள் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.


