
நாசரேத் மக்கள் திமுகவிற்கு நூறு சதவீதம் வெற்றியைத் தருவார்கள் என்று திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட நாசரேத் நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் பேரூர் செயலாளர் அ.ரவி செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக மீன்வளம்,மீனவர்நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
கனிமொழி எம்பி பேசுகையில், நாசரேத் நகர மக்கள் திமுகவிற்கு நூற்றுக்கு நூறு வெற்றியைத் தருவீர்கள் என்று உங்கள்மீது வைத்த நம்பிக்கையோடு உங்களைச் சந்திக்க வந்துள்ளோம். வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா, புதிய பெயர்களைச் சேர்க்க வேண்டுமா, இருக்கிற பெயர்கள் எல்லாம் உள்ளனவா என்பதைக் கவனமாகப் பார்க்க வேண்டும். கழக அரசு இதுவரை செய்துள்ள சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி மக்களைச் சந்திக்க வேண்டும்.பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனை பெருக்க உரிய வழிவகைகள் செய்து தரப்படும்.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் நவீன்குமார் வரவேற்றுப் பேசினார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.டி.கே.ஜெயசீலன், நகர அவைத்தலைவர் அருள்ராஜ், நகர துணைச்செயலாளர் ஜெயசிங், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ஜனகர், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜமீன் சாலமோன், ஒன்றிய அவைத்தலைவர் எஸ்.டி.பி.சௌந்தராஜன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பேரின் பராஜ்,மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தம்பு என்ற அருண் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஜோதி டேவிட், மாவட்ட பஞ்சாயத்துத் துணைத் தலைவர் வி.பி.செல்வக்குமார், ஒன்றிய செயலாளர்கள் பார்த்தீபன், ஜெயக்கொடி, இளையராஜா, இசக்கிப்பாண்டியன், முத்துசெல்வன், பாலகிருஷ்ணன், கலையரசு, குமார் பாண்டியன், சரஸ்வதி, மாவட்ட பிரதிநிதிகள் முருகத்துரைஈ சாமுவேல், அன்பு தங்கபாண்டி, அலெக்ஸ் பரூட்டோ, உள்படப் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக நகரப் பொருளாளர் சுடலைமுத்து நன்றி கூறினார்.