வல்லநாடு வனச்சரக அலுவலகத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு ஒத்திகை குறித்த பயிற்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் உள்ள ஸ்ரீவைகுண்டம் வனச்சரக அலுவலகத்தில் அடிப்படை முதலுதவி பயிற்சி, செயல்முறை விளக்க பயிற்சி, தீ தடுப்பு சாதனங்களை கையாலுதல் பயிற்சி, தீ தடுப்பு ஒத்திகை குறித்த பயிற்சி இன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் இசக்கி தலைமையில் தீயணைப்புத்துறையினர் பயிற்சி அளித்தனர்.
இந்த பயிற்சியில் ஸ்ரீவைகுண்டம் வனச்சரக அலுவலர் பிருந்தா, வனவிரிவாக்க வனச்சரக அலுவலர் சங்கரன், வனச்சரக அலுவலர்கள் சுப்பிரமணியன், கனிமொழி அரசு, கவின், மணிமாறன், வனக்காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.


