சாயர்புரம் போப் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு போட்டி நடந்தது.
இந்திய தேர்தல் ஆணையம் மாவட்ட தேர்தல் ஆணையம் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் மற்றும் நேர்மையானவர்களை தேர்ந்தெடுக்கவும் ஜனநாயக கடமையை உணர்த்தும் விதமாக இளம் வாக்காளர் விழிப்புணர்வு சுவர் இதழ் போட்டி நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் சாந்தி பொன்இந்திரா தலைமை வகித்து துவக்கி வைத்தார். 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு கவிதை, கட்டுரை ஒவியம் வரைந்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நாட்டு நலப்பணி திட்ட பேராசிரியர்கள் சுகந்தா, வசந்தி, ஸ்டான்லி மற்றும் தினகரன் செய்திருந்தனர். கலந்து கொண்ட மாணவர்களை உடற்கல்வி பேராசிரியர் ஜோன்ஸ் ராஜன் மற்றும் நூலகர் முத்தரசன் ஆகியோர் பாராட்டினார்கள்.


